பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும்.
ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை.
இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்:
"நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார்.
"என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார்.
அவ்வளவுதான்.
மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை.“கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது.
இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையில்லை.
அப்போது அவருக்கு அந்த அறிவு அல்லது பக்குவம் இருக்காது.
இப்போது தான் "வேலை செய்தவர்களுக்கு பதவி" என்ற புரிதலுக்குத் திரும்பி வந்திருக்கலாம்.
ஆனால் ராமதாசுக்கு அது தோன்றவில்லை. பதவி ஒன்றே இருந்தது — அதை மகனுக்கே ஒதுக்கினார்.
ஆனால்… அன்புமணியின் மனைவி கடந்த தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதற்கு முன்னர், அவர் "பசுமை தாயகம்" என்ற ஒரு இயற்கை சார்ந்த சமூக அமைப்பை நடத்தினார் என கட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அவரை வேட்பாளராக அறிவித்ததும், அவருடைய குழந்தைகளை பிரச்சார பீரங்கிகளாக பயன்படுத்தியதும், அந்த வீடியோக்கள் தொலைக்காட்சிகளில் பெரிய செய்தியாக வெளியானதும் — அப்போது இந்த தெளிவான விமர்சனம் ஏன் எழவில்லை என்பதே இப்போது எழும் முக்கியக் கேள்வி.
இது உண்மையில் குடும்ப சண்டைதான். ஆனால்… "ஒரே"குடும்பம் என்பதுக்கும்,
"என்" குடும்பம் என்பதுக்கும் இடையிலான வேறுபாடுதான் இன்று கட்சியில் மோதலுக்குக் காரணம்.
தன் பெண் வழி குழந்தைகளுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என பெரியவர் விரும்பினார்.அது முடியவில்லை. இப்போது சின்னவர் தன் வழி வாரிசுகளுக்கே முன்னுரிமை தர விரும்புகிறார்.
இனிமேல் இந்த சண்டை தீருமா?
திமுகவை குடும்ப அரசியல் என விமர்சிக்கும் கட்சிகள்,
பிற கட்சிகளில் நடைபெறும் குடும்ப அரசியலை பற்றி பேசவே மாட்டார்கள்.
தேமுதிகவில் மாநிலங்களவை எம்.பியாக யார் வருவார் ? ( எடப்பாடி அதிமுக ஒரு சீட் ஒதுக்கினால் கற்பனைக்கு )
விஜயகாந்தின் மனைவி? மச்சான்? மகன்?
இதில் ஒருவர்தான் வருவார்கள்.
அல்ரெடி வைகோ (மதிமுக) கட்சியில் பார்த்தாகிவிட்டது. இதுதான் இன்று இந்திய கட்சிகளின் நிலைமை.
முடிவாக... இந்திய அரசியலில் வாரிசு அரசியல் இல்லாத கட்சிகள் இல்லையா?
ஆர்.எஸ்.எஸ்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்
ஆனால் இரண்டிலும் வேறு ஒன்று உண்டு. அது இப்போது பேச தேவையில்லை.
🔚 பாட்டாளி மக்கள் கட்சி நிலவும் பிரச்சினை ஒன்றுதான். அது பணம் யார் வழியாக பிரித்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான். விரைவில் எல்லாம் சமாதனம் ஆகும். இல்லையேல் அன்பு மணி தான் இனி கட்சியை முன்னெடுப்பார்.
பார்ப்பனியம் எப்படியெல்லாம் பலம் வாய்ந்த சிற்றரசுகளை வீழ்த்தியது என்பது வரலாற்றில் படித்திருக்கிறோம். இப்போது பார்க்கிறோம். அது கூடிக்கெடுப்பது.
கருத்துகள்
கருத்துரையிடுக